துலாம் ராசி அன்பர்களே, இந்த மாதம் சொந்தங்கள் வழியில் அனுகூலமான பலன்களை கிடைக்கும். பணவரவை பொறுத்தவரை எந்த பிரச்சனையும் இருக்காது. உடன் இருப்பவர்களுடன் சுமூகமான உறவைப் பேண முயற்சிக்க வேண்டும். குடும்பத்தில் தொலைத்து போன சந்தோஷம் மீண்டும் வரும். கையில் எடுத்த காரியத்தை எப்பாடுபட்டாவது வெற்றிகரமாக செய்து முடிக்க முடியும். மற்றவர்கள் பாராட்டும்படி நடந்து கொள்வது நல்லது. வாழ்க்கையில் திடீர் திருப்பம் ஏற்படும். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். கணவன் மனைவிக்கிடையில் நெருக்கும் அதிகரிக்கும். வாழ்க்கையில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். வராது என்று நினைத்த பொருள் கைக்கு வரும். ஒரு சிலருக்கு வீடு மாற்றம் ஏற்படும். உறவினர்கள், நண்பர்களிடம் இருந்து வந்த கருத்துகள் மறையும். அக்கம் பக்கம் உள்ளவர்களுடன் வீண் வாக்குவாதம் ஏற்படும். உடல் நலத்தை பொறுத்தவரை உஷ்ணம் சம்பந்தமான தொந்தரவு ஏற்படலாம். உங்கள் பிடிவாத குணத்தை விட்டு விடுவது எல்லா வகையிலும் நல்லது. குடும்பத்தில் எல்லாரிடமும் மற்றவர்களிடம் முக்கிய விஷயத்தில் அனுசரித்து செல்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் சில விஐபிகளின் ஆதரவு கிடைக்கும். உத்யோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். தொழில் ரீதியாக ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும்.
சந்திராஷ்டமம் : 8,9,10 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831 Email: alandurastrologer@gmail.com